தனுஷிடம் வாய்ப்பு கேட்ட பிரபல நடிகை


தனுஷிடம் வாய்ப்பு கேட்ட பிரபல நடிகை

பிரபல நடிகை ஒருவர் தனுசுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறி நடிக்க வாய்ப்பு வேண்டும் என்று வெளிப்படையாக கேட்டிருக்கிறார்.

பிறந்தநாள் வாழ்த்து கூறி தனுஷிடம் வாய்ப்பு கேட்ட பிரபல நடிகை
தனுஷ்


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இவருக்கு

திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அப்படி ட்விட்டரில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கும்

மாளவிகா மோகனன் தனுஷை வாழ்த்தி ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது..

“ஹாப்பி பர்த்டே தனுஷ் சார். வருகின்ற வருடம் சிறப்பானதாக இருக்கட்டும்.

உங்களுடன் பணியாற்ற உற்சாகமாக இருக்கிறேன் (யாராவது நம் இருவரையும்

ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க வைப்பார்கள் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்)” என குறிப்பிட்டுள்ளார்

மாளவிகா மோகனன்

நடிகர் தனுஷுடன் ஜோடி சேர தான் விரும்புவதாக வெளிப்படையாக கூறி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.