ஜனாதிபதிக்கு மகஜர் கொண்டு செல்வது தொடர்பில் வடக்கு, கிழக்கு புகையிரத கடவை ஊழியர்கள் வவுனியாவில் கலந்துரையாடல்! photo

Spread the love

ஜனாதிபதிக்கு மகஜர் கொண்டு செல்வது தொடர்பில் வடக்கு, கிழக்கு புகையிரத கடவை ஊழியர்கள் வவுனியாவில் கலந்துரையாடல்! photo

ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பது தொடர்பில் வடக்கு, கிழக்கு புகையிரதக்கடவை ஊழியர்கள் இன்று (26) வவுனியாவில் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர்.

வடக்கு, கிழக்கு பகையிரதக்கடவை காப்பாளர் ஒன்றியத்தின் தலைவர் றொகான் ராஜ்குமார் தலைமையில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது குறித்த கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்ட வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த புகையிரதக்கடவை ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

வடக்கு -கிழக்கு புகையிரதக்கடவை காப்பாளர் சங்கத்தினரும், அகில இலங்கை புகையிரதக்கடவை காப்பாளர் சங்கத்தினரும் இணைந்து தங்களின் கோரிக்கைகளை ஜனாதிபதி மற்றும்

பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முகமாக புகையிரதக்கடவை ஒன்றியத்தின் தலைவரால் சமயத்தலைவர்கள்

ஊடாக புகையிரதக்கடவை காப்பாளர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்க நடவடிக்கை எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

புகையிரத திணைக்களத்தில் நிரந்தரமாக புகையிரதக்கடவை ஊழியர்களை உள்வாங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், நீதி

தேவதையின் உருவச்சிலையானது நீதிமன்றங்களில் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது பாராளுமன்றத்தின் நிறுவப்பட்டு அங்கு

நாட்டு மக்களுக்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.


Spread the love