
செம்மணியில் கைக்குழந்தையின் எலும்புக் கூடுகள்
யாழ்ப்பாணம் செம்மணியில் கைக்குழந்தைகளுடையது என சந்தேகிக்கப்படும் மூன்று எலும்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவை உட்பட 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அடையாளம் காணப்பட்டுள்ள 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகளில் 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு, அவை சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை சில எலும்புக்கூட்டு தொகுதிகள் இணைந்த நிலையில் காணப்படுவதால் , அவை ஒரே கிடங்கில் புதைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் ,
இதுவரையில் ஆடை , அணிகலன்களோ காலணிகளோ எவையும் மீட்கப்படாததால் , அவை வெற்று உடல்களாகவே புதைக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதேவேளை குறித்த பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ் . நீதிவான் நீதிமன்றில் சட்டத்தரணிகள் விண்ணப்பம் செய்துள்ள நிலையில்
கட்டளைக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நீதிமன்று திகதியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த புதைகுழிகள், 1996ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இடம்பெற்ற கிருஷாந்தி குமாரசுவாமி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் படுகொலைக்கு பின்னர்,
இலங்கை இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்ஷவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் 1999ம் ஆண்டு அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட இடத்திலேயே உள்ளன.
அப்போது, 15 மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டன, இதில் சிலர் கண்ணை கட்டிய நிலையில் மற்றும் கைகளைக் கட்டிய நிலையில் இருந்தனர்,
இது அவர்கள் படுகொலை செய்யப்பட்டதைக்கிறது.
இந்த புதுப்பட்ட கண்டுபிடிப்பு, கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை மீண்டும் வெளிக்கொணர்கிறது.
அதே நேரத்தில், பல ஆண்டுகளாக நீடித்து வரும் நீதியின் தேடலை மீண்டும் தூண்டுகிறது. மாற்றம் மற்றும் நியாயத்தை எதிர்பார்க்கும் குடும்பங்கள், சர்வதேச சமுதாயத்தின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கின்றன.
இந்த நிலையில், சரியான மற்றும் முழுமையான விசாரணைகள் நடைபெற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.