சுவையானா உருண்டை கறி| CHANA DAL CURRY| கடலைப்பருப்பு உருண்டை கறி|பருப்பு உருண்டை குழம்பு

சுவையானா உருண்டை கறி| CHANA DAL CURRY| கடலைப்பருப்பு உருண்டை கறி|பருப்பு உருண்டை குழம்பு
Spread the love

சுவையானா உருண்டை கறி| CHANA DAL CURRY| கடலைப்பருப்பு உருண்டை கறி|பருப்பு உருண்டை குழம்பு

சுவையானா உருண்டை கறி| CHANA DAL CURRY| கடலைப்பருப்பு உருண்டை கறி|பருப்பு உருண்டை குழம்பு, கடைச்சுவையில் அருமையான பருப்பு உருண்டை குழம்பு வைப்பது எப்படி .

இந்த காணொளியில் முழுமையான செய்முறை விளக்கம் சமையல் கலை நிபுனரினால் விளக்கப்படுகிறது.

அதைக் கீழ்வரும் காணொளியில் பார்வையிடுக.

1 கப் கடலைப்பருப்பு
1 பெரிய வெங்காயம்
2 தேக்கரண்டி கறி பவுடர்
2 தேக்கரண்டி தேங்காய்ப்பால் பவுடர்
சிறிய அளவு புளி
1/2 தேக்கரண்டி பெரியசீரகம்
1/4 தேக்கரண்டி கடுகு
3-4 காய்ந்த மிளகாய்
ஒரு சிறிய துண்டு இஞ்சி
கறிவேப்பிலை
உப்பு
எண்ணெய்
பெருங்காயபவுடர்

செய்முறை
3-4 மணத்தியாளம் கடலைப்பருப்பை ஊற வைக்கவும்
ஊறிய பருப்பை மிக்சி யாரில் போட்டு மெதுவான பதத்தில் அரைத்து எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பருப்பு மாவை உருண்டையாக போட்டு பொறித்து எடுக்கவும்.


இன்னொரு பாத்திரத்தில் கொஞ்சமாக எண்ணெய் விட்டு அதில் கடுகு, பெரிஞ்சீரகம் , கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் போடவும் , சிறிது நேரம் கழித்து வெங்காயம் போட்டு வதக்கவும் .

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பெருங்காயம் சேர்த்து வதக்கவும். பின் அதனுள் கறி தூள் சேர்த்து வதக்கவும். தூள் வெக்கை அடங்கியதும் அதில் புளி சேர்க்கவும் .

குழம்பு கொதித்ததும் அதனுள் தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடவும். குழம்பு கொதித்ததும் அதனுள் பருப்பு உருண்டையை போட்டு 10-15 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைக்கவும் பிறகு சுவையான உருண்டை கறி தயார்.

இதுபோல நீங்களும் இன்று முதல் வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள் கடைச்சுவையில் அருமையான பருப்பு உருண்டை கறி