சுதந்திர தினத்தை முன்னிட்டு 679 கைதிகள் விடுதலை
இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 679 சிறைக் கைதிகளுக்கு
பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு பொது மன்னிப்பு பெற்றுள்ள 679 சிறைக் கைதிகளுள் பாரிய குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான கைதிகள் எவரும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.






