சிறையில் சிகரெட் கேட்டு அடம்பிடிக்கும் பிரபல நடிகை


சிறையில் சிகரெட் கேட்டு அடம்பிடிக்கும் பிரபல நடிகை

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பிரபல நடிகை சிகரெட் கேட்டு அடம்பிடிப்பதாக கூறப்படுகிறது.

சிறையில் சிகரெட் கேட்டு அடம்பிடிக்கும் பிரபல நடிகை
சஞ்சனா கல்ராணி
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட

நடிகை சஞ்சனா கல்ராணி பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். முதல்நாள் சிறையில் கொடுத்த உணவை

அமைதியாக வாங்கி சாப்பிட்ட சஞ்சனா, அதன்பின்னர் தனக்கு தினமும் சாப்பிட கோழி இறைச்சி வேண்டும் என்று கேட்டு வருவதாக தெரிகிறது.

கடந்த வியாழக்கிழமை இரவு தனக்கு கோழி இறைச்சி வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் கேட்டு சஞ்சனா அடம்பிடித்து உள்ளார். ஆனால் வாரத்திற்கு ஒருநாள் தான் சிறையில் அசைவ

உணவு வழங்குவோம், இதனால் தற்போது கோழி இறைச்சி வழங்க முடியாது என்று கூறி அதிகாரிகள் சமாதானம் செய்து உள்ளனர்.

இதையடுத்து தனக்கு சிகரெட் வேண்டும் என்றும் சஞ்சனா கேட்டு உள்ளார். அதற்கும் அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

சஞ்சனா கல்ராணி

இந்த நிலையில் தனக்கு சிகரெட், கோழி இறைச்சி வேண்டும் என்று நேற்றும் சிறைத்துறை அதிகாரிகளிடம் சஞ்சனா அடம்பிடித்ததாக

தெரிகிறது. ஆனால் இதற்கு அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதையடுத்து கோழி இறைச்சி வாங்கி தராவிட்டால் கூட

பரவாயில்லை, சிகரெட் மட்டுமாவது வாங்கி கொடுங்கள் என்று சஞ்சனா கேட்டு உள்ளார். ஆனால் சிறைத்துறை அதிகாரிகள்

இதற்கு மறுத்ததோடு, அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டு சென்றனர்