
சினிமாவுக்குள் மூழ்கும் சீமான்களுக்கு
குரங்கிலிருந்து மனிதன்
பிறந்தானென்று
கூர்ப்பு விளக்குது – திரை
அரங்கினில் நின்று
தொங்குவதைப் பார்க்க
அதுவும் விளங்குது.
வருசா வருசம்
விஜய்யும் அஜித்தும்
திரையில் வருவினம். – இங்கு
வலியோடு வாழும் ஈழத்
தமிழன் வாழ்வுக்கு
என்ன தருவினம்?
கலையை மதிப்பதும்
அதனை ரசிப்பதும்
அவரவர் உரிமைகள் – அதற்குன்
நிலையை அழிப்பதும்
நினைவை இழப்பதும்
வாழ்விலென்ன பெருமைகள்.
ரொக்கெட் செலுத்தியும்
விக்கற் வீழ்த்தியும்
பொக்கெற்றை நிரப்புறார்கள் – நீங்கள்
டிக்டொக்கை அமத்தியும்
சீக்ரட்டை பத்தியும் ஏன்
மாக்கெற்றை இழக்கிறீர்கள்.
திரிஷா பிறநடிகைகள்
பெரிதா செய்ததை யார்க்கும்
தெரிந்தால் சொல்லுங்கள் – அல்லது
ஒரிசா பாலுவையும்
தெரேசா அன்னையையும் முடிந்தால்
உசிரா வணங்குங்கள்❗
-பிறேமா(எழில்)-
- வெளியில் தெரியாத வேர்கள்.
- சேரன் குளிர்களி
- ஈழத் தமிழச்சி ஏலாத் தமிழச்சியா
- பாதுகாப்பு வலயமென்று
- செட்டிகுள முகாமும் சீ என்ற வாழ்க்கையும்
- தனியாகப் போறவளே
- அப்பான்ர சைக்கிளே அந்தநாள் வாகனம்
- பாரதமே இவர்களையாவது பறக்கவிடு
- டெங்கொழிக்க எங்களின் பங்கு
- மழைக்காலத் துன்பங்கள்
- நாங்கள் மலர்ந்துவிட்டோம்.
- சினிமாவுக்குள் மூழ்கும் சீமான்களுக்கு
- ஓடிஓடி வாழ்ந்தபோதும் ஓய்ந்திடாத கல்வி
- இளைஞரில்லா இலங்கை
- தியாகத்துக்கான காவடி தமிழர்