சாட்டி மாவீரர் மைதானத்தில் கொட்டல் கட்டும் வெளிநாட்டு தமிழர்
சாட்டி மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள பகுதியை ஆக்கிரமித்துள்ள வெளிநாட்டு தமிழர் ஒருவர் கொட்டல் ஒன்றை அமைக்கும் நகர்வில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்ட பின்னர், மாவீரர் மயானங்கள் சிங்கள இராணுவத்தால் சிதைத்து அழிக்க பட்டது .
அதன் பின்னர் சிங்கள அரசின் ஆதரவாக செயல் படும், கூலிக் குழுக்கள் அல்லது ஆதரவு நபர்கள் ,தமிழர் விரோத செயல்களில் ஈடுபட்ட வண்னம் உள்ளனர் .
இந்த சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் கொட்டல் அமைத்திட சென்றுள்ள தமிழர் யார், அவர் எந்த நாட்டில் இருந்து சென்றுள்ளார் என்ற தகவலை ,போர் குற்ற தகவல் திரட்டும் பிரிவினர் திரட்டி வருகின்றனர் .
மக்கள் வழிபடும் மாவீரர்கள் கல்லறைகள் உடைக்க பட்டு ,அந்த புனிதர்கள் அவமதிக்க படும் செயல், மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
மக்கள் எழுச்சி இலங்கையை ஆக்கிரமித்துள்ள நிலையில் ,மாவீரர் வித்துடல்கள் விதைக்க பட்ட பகுதியில் கொட்டல் அமைக்க முனைவது எவ்வாறு சாத்தியம்..?
என்பதும் ,அவ்வாறு தொடர்ந்து அவர்களினால்
அந்த கொட்டலை நடாத்தி செல்ல முடியுமா என்ற கேள்வியை எழுப்பி நிற்கிறது .
தகவல் மறவன்