
சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான கிரேவி
சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான கிரேவி,கடைசுவையில் இட்லி தோசை சப்பாத்தி இந்த கிரேவி கூட செஞ்சு சாப்பிடுங்க செமையாக இருக்கும் .
இட்லி தோசை சப்பாத்திக்கு பக்காவான கிரேவி செய்வது எப்படி ..?

தோசை இட்லி சப்பாத்திக்கு பக்காவான வெங்காய கிரேவி இப்படி செஞ்சு பாருங்க ,இலகுவான முறையில மிகவும் சுவையான வெங்காய கிரேவி செய்யலாம் வாங்க .
வெங்காய கிரேவி செய்வதற்கு அடுப்பில கடாய வைத்து சூடாக்கி கொள்ளுங்க ,கடாய் சூடானதும் எண்ணெய் சேர்த்து சூடாக்குங்க .

அப்புறமா கடலை உளுந்து ,வெந்தயம் ,சீரகம் ,பூண்டு ,போட்டு நன்றாக கலக்கி வதக்குங்க ,வதங்குவது நான்கு பெரிய வெங்காயம் பொடியாக வெட்டி ,உப்பு சேர்த்து நன்றாக வதக்கி எடுங்க .
அடுப்பிடிக்காம வெங்காயத்தை வதக்கி எடுத்து மொநிறமா வந்ததும் சூடு தண்ணியில அரை மணி நேரம் வறுமிளகாய் ஊற வைத்து அதை எடுத்து இப்போ இதோடு சேர்த்து வதக்கிடுங்க .
10 வறு மிளகாய் கூட சின்ன துண்டு புளி சேர்த்து நன்றாக கலக்கி எடுங்க .வேகியதும் இப்போ அடுப்பை அணைத்து அதனை ஆற வைத்திடுங்க .
வெங்காய கிரேவி செய்முறை இரண்டு
இப்போ அதனை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து எடுங்க .இப்போ மீள அடுப்பில கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து ஒரு கரண்டி கடுகு ,உளுந்து ,பெருங்காய தூள் ,கறிவேப்பிலை சேர்த்து நன்றாக பொரிந்தது வதங்கி வந்ததும் , அரைத்து வைத்தவற்றை இப்போ இதில சேர்த்து கலக்கி விடுங்க .

இப்போ இது கூடவே ஒரு கரண்டி நாட்டு சக்கரை சேர்த்திடுங்க ,இதன் நிறம் மாறும் வரை நன்றாக வதக்கி கலக்கி எடுங்க .
நன்றாக வதக்கி எடுத்த பின்னர் நிறம் மாறியதும் அடுப்பில இருந்து வெங்காய கிரேவியை இறக்கிடுங்க .
ஆறியதும் ,போத்தலில் அடைத்து வைத்து இந்த வெங்காய கிரேவியை இட்லி தோசை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடுங்க .

நீங்க விரும்பும் நேரம் மூன்று மாதம் வரை வைத்து சாப்பிட முடியும் .
மிகவும் இலகுவான முறையில் கடை சுவையில் வீட்டில் ,இட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற வெங்காய கிரேவி செஞ்சு சாப்பிடுங்க மக்களே .