சசிகலாவுக்கு மீண்டும் மூச்சுத்திணறல்

சசிகலா

சசிகலாவுக்கு மீண்டும் மூச்சுத்திணறல்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

அவருடைய 4 ஆண்டு சிறை தண்டனை வரும் 27-ம் தேதி நிறைவுபெறுகிறது.

பெங்களூரு சிறையில் இருந்து 27-ம் தேதியன்று சசிகலா விடுதலையாக இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கடந்த இரு நாட்களாக லேசான காய்ச்சல், இருமல்

இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிறைச்சாலை

வளாகத்திலுள்ள மருத்துவர்கள் சசிகலாவின் உடல்நிலையை பரிசோதனை செய்தனர்.

அதன்பின், பெங்களூருவில் உள்ள பவுரிங் மருத்துவமனைக்கு அழைத்துச்

சென்றனர். அங்கு அவரது உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பெங்களூரு மருத்துவமனையில் சாதாரண வார்டில் சிகிச்சை பெற்று வந்த சசிகலாவுக்கு நள்ளிரவில் மீண்டும்

மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Spread the love