சிதறும் பகை

Spread the love

சிதறும் பகை

தோளில் வேங்கையர் கருவி தாங்கியே
வீதி வந்திடுவார்
மண் பறி கயவரை கொன்றே
மணி ஈழம் தந்திடுவார்

வீழ்ந்தனர் என்றே
வீதி வந்தவர்
ஆக்கினை அறுத்திடுவார்
அனலிலே எரித்திடுவார்

மண்ணில் புதைந்த வேரினை காண
மறந்த சிங்களவா
கிளையினை வெட்டி மகிழ்ந்தாய்
மடையன் நீயல்லவா

நாளினில் ஆயிரம் கொன்றே வீசிய
நாடு உனதல்லவா
நாடோடியாய் பறந்தவர்
நாடே வந்தனர் இது புதிதல்லவா ?

முப்படை தாங்கியே வந்தனர் புலிகள்
இப்படை காணலையா ?
இது தான் பதியடா செய்த சதியடா
இலங்கா இரண்டா உடையுதடா …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 21-01-2021

வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply