கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையாக என் வீட்டை தருகிறேன் -பார்த்திபன்,


கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையாக என் வீட்டை தருகிறேன் -பார்த்திபன்

இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையாக என் வீட்டை தருகிறேன் என்று கூறியுள்ளார்.

என் வீட்டை தருகிறேன் – பார்த்திபன்

உலக மக்களை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். தினம்

தினம் இறப்புகள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

இந்நிலையில் நடிகர் பார்த்திபன் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில், இப்படி உலகம் முழுக்க இந்த நோய்

பரவி வருகிறது. 24 மணி நேரமும் இதை பற்றியே சிந்தித்து கொண்டு இருப்பதால் எனக்கு ஒரு யோசனை வருகிறது.

24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனைகளை நாமே உருவாக்கணும். அதாவது இரண்டு வீடுகள் இருந்தால் அதில்

ஒன்றை இந்த கொரோனா மருத்துவமனையாக கொடுக்க முன் வரலாம் . எனக்கு 3 பிளாட் இருக்கு அதையும் கொடுக்க தயார்.

அதுபோல தெருவுக்கு தெரு இப்படி பட்ட மருத்துவ வசதி செய்து கொள்வது பெரிய உதவியாயிருக்கும்” என்று கூறியுள்ளார்.

கொரோனா வைரஸால்
கொரோனா வைரஸால்