கொரனோ தாக்குதல் 4 பேர் மரணம்


கொவிட் 19 தொற்றாளர்களாக நேற்று(12) 584 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 49,537 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொவிட் 19 தொற்றுக்கு இலக்காகி மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை 244 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு-13, ஹங்வெல்ல, மாத்தளை, வெல்லம்பிட்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தோரே உயிரிழந்துள்ளனர்