கொரனோவால் தனிமைப்படுத்த பட்ட 228 பேர் வீடு திரும்பினார்


கொரனோவால் தனிமைப்படுத்த பட்ட 228 பேர் வீடு திரும்பினார்

கொரோனா தொற்றுக்கு மத்தியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களில் 228 பேர் இன்று தமது வீடுகளுக்கு திரும்பவுள்ளனர்.

இதுவரையில் 32,816 பேர் தமக்கான தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்திருப்பதாக கொவிட் 19 வைரசை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

முப்படையினரால் நடத்தப்படும் 65 மத்திய நிலையங்களில் 7,058 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை

கட்டார் நாட்டில் இருந்து 296 பேரும், ஜேர்மனியில் இருந்து 102 பேரும் ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து 23 பேரும் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.