கொட்டகலையில் துப்பாக்கிச் சூடு

கொட்டகலையில் துப்பாக்கிச் சூடு
Spread the love

கொட்டகலையில் துப்பாக்கிச் சூடு

கொட்டகலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் வந்து இடம் பெற்றுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொட்டகல பாலபல்ல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில் கடந்த இரவு துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

திடீரென நடத்தப்பட்ட இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில். 34 வயதுடைய வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

வாகனம் ஒன்றில் வந்த மர்ம ஆயுததாரிகள், திடீரென துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இலங்கையில் தொடரும் இவ்விதமான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் ,அதிகரித்துக் காணப்படுவதால் மக்கள் மத்தியில் அச்ச நிலை காணப்படுகிறது.

இலங்கையில் ஆயுதப் பாவனை தடைவிதிக்கப்பட்டுள்ளது .அவ்வாறு ஆயுதங்கள் பாவித்தால் 20 வருட கடூழிய சிறை தண்டனை என சட்டம் இருக்கிறது.

அவ்வாறான காலப்பகுதியில் இவ்வாறான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துச் செல்வது ,அனுரா அரசின் திட்டமிடப்பட்ட நிழல் நடவடிக்கையா என்பது தொடர்பாகவே சந்தேகம் வெளியிடப்படுகிறது.

அனுரா ஆட்சி இடம்பெற்ற 30ஆவது சூட்டு சம்பவமாக இது பார்க்கப்படுகிறது.

மக்களை நல்வழிப்படுத்த வந்த அது அவருடைய ஆட்சி அதிகாரம், இன்று இப்படி இருப்பது மக்கள் மத்தியில் சந்தேகங்களையும் அவர் மீதான அதிர்த்தியம் அதிகமாக ஏற்படுத்தி வருவதாக ,நோக்கர்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இவ்வாறு துப்பாக்கி சூட்டு சம்பவம் அதிகரித்து காணப்பட்டால் ,அது மிகப் பெரும் அபாய நிலையில் ,இலங்கையை அழைத்துச் செல்லும் என்பதை மக்கள் கருத்தாக உள்ளது.