குடும்பஸ்தர் வெட்டிக்கொலை
குடும்பஸ்தர் வெட்டிக்கொலை ,மட்டக்களப்பு , காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடாவில் நேற்றிரவு 10 மணியளவில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இரு பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய மரியதாஸ் என்பவரே வெட்டுக்காயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் .
குறித்த நபர் நேற்றிரவு 10 மணியளவில் நாவற்குடாவிலுள்ள சாரதா வீதியால் வந்து கொண்டிருந்த போது இனந்தெரியாதவர்களால் கொலை செய்யப்பட்டதாக தெரியவருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- கடுங்கன்னாவாவில் பாறைச்சரிவுக்குப் பிறகு கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் திறக்கப்பட்டது

- பிரதான சாலைகளில் மோட்டார் சைக்கிள்களுக்கென பிரத்தியேகப் பாதைகள் அமைக்கத் திட்டம்

- டெங்கு வார்டுகள் நிரம்பி வழிகின்றன

- கடலுக்கு செல்ல வேண்டாம் மீனவர்களுக்கு எச்சரிக்கை

- தலைமை கணக்காய்வாளர் சம்பள உயர்வு குறித்த வாக்குவாதம்







