கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்கும் நயன்தாரா?


கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்கும் நயன்தாரா?

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடிகை நயன்தாரா கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்கிறாரா நயன்தாரா?
நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்


சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த வருடம் தொடங்கி ஐதராபாத் திரைப்பட நகரில் விறுவிறுப்பாக நடந்தது.

ஆனால் திடீரென்று கிளம்பிய கொரோனா பரவலால் படப்பிடிப்பு நின்று போனது. கிட்டத்தட்ட 4 மாதங்களாக படப்பிடிப்பு முடங்கி இருக்கிறது.

மீண்டும் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பதில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. படப்பிடிப்பில் நூற்றுக்கணக்கானோர்

பங்கேற்கும் நிலை இருப்பதால் கொரோனா முற்றிலும் ஒழிந்த பிறகே படப்பிடிப்பை தொடங்க வாய்ப்பு இருப்பதாக

கூறப்படுகிறது. தீபாவளிக்கு திரைக்கு வருவதாக இருந்த இந்த படத்தை பொங்கல் பண்டிகைக்கு தள்ளி வைத்தனர்.

படப்பிடிப்புகளை தொடங்குவதில் மேலும் தாமதம் ஏற்பட்டு வருதால் பொங்கலுக்கு படம் ரிலீசாகுமா என்பதும்

கேள்விக்குறியாக உள்ளது. இன்னும் 50 சதவீத படப்பிடிப்புகள் பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

அண்ணாத்த பட போஸ்டர்

இந்த நிலையில் அண்ணாத்த படத்தின் கதை இது தான் எனக் கூறி ஒரு கதை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ரஜினியின்

முறைப் பெண்களான குஷ்புவும், மீனாவும் அவரை திருமணம் செய்ய போட்டி போடுகிறார்களாம். இருவரின் மனதையும்

புண்புடுத்த வேண்டாம் என ரஜினி நயன்தாராவை திருமணம் செய்து கொள்கிறாராம்.

நயன்தாரா, ரஜினி தம்பதியின் மகளான கீர்த்தி சுரேஷை எப்படியாவது தங்கள் வீட்டு மருமகளாக்க குஷ்புவும், மீனாவும்

பின்னர் போட்டி போடுகிறார்களாம். அந்த போட்டியால் ஏற்படும் பிரச்சனைகளும், சிக்கல்களும் தான் படத்தின் கதை என்று

கூறப்படுகிறது. முன்னதாக நயன்தாரா, அண்ணாத்த படத்தில் வழக்கறிஞராக நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது

கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிப்பதாக தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது