காவல்துறையை ஊழியரை கொன்று வீசிய பேரூந்து


காவல்துறையை ஊழியரை கொன்று வீசிய பேரூந்து

மஸ்கெலியாவில் இருந்து நல்லதன்னி நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர்

ஒருவர் மவுசாகலை சோதனை சாவடியில் வைத்து பேருந்தின் பின் டயர் பகுதியில் சிக்குண்டு உயிரிழந்து உள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (20) இரவு 7 மணி அளவில் இடம்பெற்றதாகவும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸ் திணைக்களத்தின் வாழ்க்கை பாதுகாப்பு பிரிவில் பணியாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

40 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான கெப்படிபொல பகுதியை சேர்ந்த அஜித்வீரசூரிய என்ற

பொலிஸ் உத்தியோக்தரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.