காதலனுடன் தங்கிய காதலி மரணம்
22 வயதான யுவதி ஒருவர் தனது காதலனுடன் விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது குறித்த யுவதி தன்னுயிரை மாய்த்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறக்குவானை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இறக்குவானை பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞன், தனது காதலியான 22 வயதுடைய யுவதியுடன் முச்சக்கரவண்டியில் இறக்குவானை பனாவல பகுதிக்குச் சென்று அங்குள்ள விடுதி ஒன்றில் அறை ஒன்றைப் பதிவு செய்து அங்கு இருவரும் தங்கியுள்ளதாக இறக்குவானை பொலிஸார் தெரிவித்தனர்.
காதலனுடன் தங்கிய காதலி மரணம்
குறித்த இளைஞன் தனது காதலியை அந்த அறையில் விட்டுவிட்டு மதிய உணவு வாங்குவதற்காக வெளியே சென்று விட்டு திரும்பி வந்து பார்க்கையில் தனது காதலி குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டதாகவும் குறித்த இளைஞன் பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் குறித்த இளைஞர் விடுதி ஊழியர்களுக்கு அறிவித்ததையடுத்து, அவர்களின் உதவியுடன் யுவதி காவத்தை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அங்கு யுவதியைப் பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி

- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்

- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா

- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது

- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை

- போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி

- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது

- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது

- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை

- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்







