கண்ணை கட்டி கொண்டு த்ரிஷா ரசிகர் செய்த விஷயம்.. வைரல் வீடியோ


கண்ணை கட்டி கொண்டு த்ரிஷா ரசிகர் செய்த விஷயம்.. வைரல் வீடியோ

த்ரிஷாவின் ரசிகர் ஒருவர் கண்ணைக் கட்டிக்கொண்டு த்ரிஷா ஓவியத்தை வரையும் வீடியோ வைரல் ஆகி உள்ளது.

த்ரிஷா அளவுக்கு தமிழ் சினிமாவில் தொடர்ந்து 18 வருடங்களுக்கு மேலாக முன்னணி ஹீரோயினாக வேறு யாரும் இருக்க

வாய்ப்பில்லை. மௌனம் பேசியதே தொடங்கி படிப்படியாக பல முன்னணி ஹீரோக்களுக்கு ஹீரோயினாக நடித்திருக்கிறார் அவர்.

புத்தம் புதிய அம்சங்களுடன் வெளியாகிறது- சாம்சங் மொபைல்!
அவருக்கு அதிக அளவு ரசிகர்களும் இருக்கிறார்கள் என்று

சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதில் வெறித்தனமான ரசிகர் ஒருவர் த்ரிஷாவின் ஓவியத்தை கண்ணை மூடிக் கொண்டு வரைந்திருக்கிறார். இந்த

வீடியோ தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர்

கணக்கில் பகிர்ந்து இருக்கும் த்ரிஷா “Love this. Thank you so much!” என குறிப்பிட்டிருக்கிறார்.

முதலில் ஒரு துணியை கொண்டு கண்ணை கட்டிக் கொள்ளும் அந்த நபர் அதற்கு பிறகு பேப்பரை வைத்து அதற்கு பின்னாலிருந்து

த்ரிஷாவின் முகத்தை ஓவியமாக தலைகீழாக வரைகிறார். கண்ணை கட்டிக் கொண்டு அவர் இப்படி கச்சிதமாக த்ரிஷாவின்

முகத்தை வரைந்திருப்பது ரசிகர்களுக்கு ஆச்சர்யம் அளித்திருக்கிறது. பலரும் அவருக்கு பாராட்டுக்களை வாரி வழங்கி

வருகிறார்கள். அவரது திறமையை பாராட்டி பலரும் கமெண்ட் பதிவிட்டு வருகிறார்கள்.