கடலில் மூழ்கி இரு மாணவர்கள் மரணம்

ராகி அப்பம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க சுவையே தனி
இதனை SHARE பண்ணுங்க

கடலில் மூழ்கி இரு மாணவர்கள் மரணம்

திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் உள்ள வாழைத்தோட்டம் கடலில் நீராடிக்

கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதோடு இரண்டு சிறுவர்களினதும்

சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு நேற்று (03) இரவு 10.40

மணியளவில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை விட்டுச் சென்ற நான்கு சிறுவர்கள் வாழைத்தோட்டம் கடலில் நீராடியுள்ளனர். இதில்

இரண்டு சிறுவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கியுள்ளனர். இதன்போது உயிர் தப்பிய

மற்றைய இரண்டு சிறுவர்கள் பிரதேச மக்களிடம் சம்பவம் குறித்து தெரிவித்ததையடுத்து கடலில்

தேடியபோது இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.


    இதனை SHARE பண்ணுங்க

    Author: நலன் விரும்பி

    Leave a Reply