
ஓடிஓடி வாழ்ந்தபோதும் ஓய்ந்திடாத கல்வி
குண்டு மழை நடுவிலும்
கொள்கையோடு கற்றோம் – உலகம்
கண்டு கொள்ளா நிலையிலும்
கல்வியினைப் பெற்றோம்.
மண்டை பிளக்கும் வெயிலிலும்
மரநிழலில் கற்றோம் – கொடும்
சண்டை நடந்த நேரத்திலும்
சலிக்காமல் கற்றோம்.
பராலைற் வெளிச்சத்திலும்
படிப்பினைத் தொடர்ந்தோம் – வளம்
இராத காலங்களிலும்
வல்லோராய் வந்தோம்.
உயிர்காத்து கற்பித்தோர்க்கு
உயர் மதிப்பைக் கொடுத்தோம் – அன்று
உயிர் துறக்கும் வாழ்வினிலும்
உயர் மதிப்பெண்கள் எடுத்தோம்.
தந்தை தாயின் உதவியின்றித்
தனியாகச் சென்றோம் – நல்ல
சிந்தையுள்ள குருமாரைச்
சந்தித்ததால் வென்றோம்.
அண்டை நாட்டின் சதியினாலும்
அழுதழுது கற்றோம் – என்றும்
அன்றையநாள் கல்வி வாழ்வை
எப்படித் தான் மறப்போம்❗
-பிறேமா(எழில்)-
- வெளியில் தெரியாத வேர்கள்.
- சேரன் குளிர்களி
- ஈழத் தமிழச்சி ஏலாத் தமிழச்சியா
- பாதுகாப்பு வலயமென்று
- செட்டிகுள முகாமும் சீ என்ற வாழ்க்கையும்
- தனியாகப் போறவளே
- அப்பான்ர சைக்கிளே அந்தநாள் வாகனம்
- பாரதமே இவர்களையாவது பறக்கவிடு
- டெங்கொழிக்க எங்களின் பங்கு
- மழைக்காலத் துன்பங்கள்
- நாங்கள் மலர்ந்துவிட்டோம்.
- சினிமாவுக்குள் மூழ்கும் சீமான்களுக்கு
- ஓடிஓடி வாழ்ந்தபோதும் ஓய்ந்திடாத கல்வி
- இளைஞரில்லா இலங்கை
- தியாகத்துக்கான காவடி தமிழர்