ஒட்டி சுட்டான் ஒட்டு தொழில் சாலையை இயங்க வைக்கும் கோட்டா அரசு

Spread the love

ஒட்டி சுட்டான் ஒட்டு தொழில் சாலையை இயங்க வைக்கும் கோட்டா அரசு

இலங்கை – ஒட்டி சுட்டானில் அமைந்துள்ள ஒட்டு தொழில் சாலையை மீள் ஆரம்பிக்கும் நடவடிக்கையில் ஆளும் அரசு முனைப்பு காட்டி வருகிறது .

தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று மீளவும் ஆட்சியில் அமர துடிக்கும் கோட்டபாய குழுவினர் இந்த ஒட்டு தொழில்

சாலையை சில மாதங்களில் புனரமைத்து மக்கள் பயன் பாட்டுக்கு திறந்து வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர் .

அங்கு ,ஓடு,செங்கல் போன்றவை தயாரிக்க பட்டு வன்னி , மற்றும் யாழ்ப்பகுதி எங்கும் அமோக விற்பனையில் ஈடுபட்டு வந்தது .

இந்த ஒட்டு தொழிற்ச்சாலையால் பல நூறு மக்கள் வேலை வாய்ப்பையும் பெற்று வந்தனர் .


அவ்வாறான வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஒட்டு தொழில் சாலை மீள இயங்க வைக்க படவுள்ளது மக்கள் மத்தியில் மகிழ்வை ஏற்படுத்தியுள்ளது


Spread the love