ஏன் என்னை மறந்தாய்
உறவை தந்தால் உயிரை தருவேன்
உயிரே உயிரே நினைத்து விடு …..
அழைக்கும் மரணம் அதனை விரட்டி
அன்பே காப்பேன் புரிந்து விடு ….
எரியும் தீயில் உருகும் மெழுகாய்
எரிகிறேன் தினமும் புரிந்து விடு …
ஒற்றை சொல்லை உரைக்க மறுத்து
ஒளிகிறாய் ஏனோ மொழிந்து விடு ….?
கஞ்சல் உடையில் கசங்கிய உடலை
காண மறந்து சென்றாயா ..?
அழகிய உள்ளம் அதற்குள் உள்ளதை
அறிய மறந்து பறந்தாயா….?
ஒளியை வீசும் கதிரவன் ஒளியில்
ஓசியில் வாழ்ந்து செல்பவரே ….
ஏழை என்றே ஏனோ என்னை
எறிந்து நீயும் சென்றாயோ …?
ஆடம்பரங்கள் தேடி அலையும்
அழகே கொஞ்சம் நிற்பாய்….
தேடிய இன்பம் தேறா பொழுதில்
தேம்பி தேம்பி எனக்காய் அழுவாய் …!
வன்னி மைந்தன் -(ஜெகன் )
ஆக்கம் – 1-01-2018
வன்னி மைந்தன் கவிதைகள்