எரிவாயு விலை ஐரோப்பாவுக்கு நன்றி- புட்டீன் நக்கல்

எரிவாயு விலை ஐரோப்பாவுக்கு நன்றி- புட்டீன் நக்கல்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

எரிவாயு விலை ஐரோப்பாவுக்கு நன்றி- புட்டீன் நக்கல்

உக்கிரேன் மீதான போருக்கு பின்னர் எமது பொருளாதரம் அதிகம் வளர்ந்துள்ளது
எனவும் எரிவாயு விலை என்றுமில்லாதவாறு இலாபத்தை பெற்று தந்துள்ளது என ரசியா ஜனாதிபதி புட்டீன் மகிழ்ச்சியில் பேசியுள்ளார்

இந்த எரிவாயு விலை அதிகரிக்க காரணமாக விளங்கிய ஐரோப்பாவுக்கு எமது நன்றி என ரசியா ஜனாதிபது புட்டீன் நக்கலாக தெரிவித்துள்ளார்

ஐரோப்பா எங்கும் எரிவாயு விலை ஐம்பது வீதம் விலை அதிகரிக்க பட்டுள்ளது ,இந்த விலை உயர்வினால் மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்

இந்த எரிவாயு விலை ஏற்றதினால் ஐரோப்பாவில் நாளாந்த வாழ்வை கொண்டு நகர்த்த முடியாது பல குடும்பங்கள் திணறிய வண்ணம் உள்ளனர்

உக்கிரேன் ரசியா போரை மையமாக வைத்து ரசியா நாட்டின் மீது ஐரோப்பா அமெரிக்கா,கனடா உள்ளிட்ட நேச நடுகள் பொருளாதார தடைகளை விதித்தன

எரிவாயு விலை ஐரோப்பாவுக்கு நன்றி- புட்டீன் நக்கல்

ஆனால் அதனை ரசியா ஜனாதிபதி புட்டீன் கண்டு கொள்ளவில்லை ,மாறாக ரசியாவிடம் இருந்து நிறுத்த பட்ட நாற்பது வீதமான எரிவாயு ஏற்றுமதி தடுக்க பட்டதால் அமெரிக்கா மகிழ்ந்தது

ரசியாவின் பொருளாதாரம் வீழ்ந்து விடும் என அமெரிக்கா ஐரோப்பா கருதின ஆனால் போருக்கு முன்னரை விட இப்போது நாம் அதிக விலை அதிகரிப்பால் இலாபத்தை பெறுகிறோம் என ரசியா ஜனாதிபதி புட்டீன் தெரிவித்துள்ளார்

உண்மையில் பல நாடுகள் அமெரிக்காவின் தடைகளை மீறி ரசியாவிடம் இருந்து எரிவாயுவை பெற்று கொள்கின்றன ,தற்போது உலக சந்தையில் ஏற்பட்ட அதிக விலை ஏற்றம் ரசியாவுக்கு அதிக இலாபம் என்பது உண்மைதான்

இப்பொழுது ரசியா ஜனாதிபதி புட்டீன் கூறிய கருத்தில் உண்மை உள்ளது எனலாம்
,இந்த போரினால் இலாபம் அடைவது யார் ..?

உலக நாடுகளுக்கே உணவு மற்றும் எரிவாயு ஏற்றுமதியில் அதிக பங்கு வகித்து வந்தது ரசியா என்ற உண்மை உடைந்துள்ளது

மக்களுக்கு இந்த உண்மையினை மறைத்து ரசியா மீதான கோபத்தை தூண்டி வந்த ஐரோப்ப மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ரசியா அதிபர புட்டீன் கூறிய விடயம் சினத்தை ஏற்படுத்தியுள்ளது

திடீர் எரிவாயு விலை அதிகரிப்பை மேற்கொண்ட ஐரோப்பாவுக்கு ரசியா ஜனாதிபதி புட்டீன் நன்றி தெரிவித்து பாராட்டியது மகிழ்ச்சியா நக்கலா ..? நீங்களே முடிவெடுங்கள் ..


இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

Leave a Reply

Your email address will not be published.