வெடித்த போராட்டம் கண்ணீர் புகை வீச்சு

Spread the love

வெடித்த போராட்டம் கண்ணீர் புகை வீச்சு

இலங்கையில் ஆளும் ஜனாதிபதியை பதவி விலகி கோரி போராட்டம் இடம்பெற்று வருகிறது ,இவ்வேளை பொலிஸ் தலைமையகம் முன்பாக மக்கள் கூடி போராட்டம் நடத்தினர் அந்த மக்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு இடம்பெற்றுள்ளது

அமைதி வழியில் போராட்டம் நடத்தும் அப்பாவி மக்கள் மீது அரச இயந்திரம் காக்கிகளை ஏவி தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

காலிமுக திடலில் தொடரும் போராட்டம் தற்போது உக்கிரம் பெற்றுள்ளது ,அதன் ஒரு அங்கமாகவே காவல்துறை தலைமையகம் முன்பாக இந்த போராட்டம் வெடித்தது

ஆயுத படைகளை கொண்டு போராட்டத்தை அடக்கி ஒடுக்கிட கண்ணீர் புகை

குண்டு வீச்சு இடம்பெற்றது ஆளும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மீது மக்களுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது

மக்களினால் தெரிவு செய்ய பட்ட அரசு மக்கள் போராட்டங்களுக்கு மதிப்பளித்து பதவி விலகி செல்லுதல் மேற்குலகபண்பு ,இங்கே அந்த மக்கள் மீது கண்ணீர் புகை வீச்சு நடத்த பட்டுள்ளது

நாள் தோறும் எகிறும் விலை வாசி அதனால் பல குடும்பங்கள் கண்ணீர் வாழ்ககை வாழ்கின்றனர்

வெடித்து சிதறும் மக்கள் கணீர் முன்பாக ஆளும் ஆட்சியார்கள் அரசாட்சி நீடிக்குமா புகையும் மக்களின் உள்ள குமுறல் அரசுக்கு கேட்கிறதா

இவ்வாறு கண்ணீர் மல்க மக்கள் கோஷங்கள் வெடித்து பறக்கிறது ,ஆனால் அவற்றை

செவி சாய்க்காது தமது அதிகாரத்தை தக்க வைத்து கொள்வதில் ஆளும் பிரதமர் ,ஜனாதிபதி காய்களை நகர்த்திய வண்ணம் உள்ளனர்

வெடித்த போராட்டம் கண்ணீர் புகை வீச்சு

மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்க பட்டு பொருட்கள் இன்றி அவதி உறும் மக்களின் நிலை அவர்கள் படும் வேதனைகள் எவற்றையும் கண்டு கொள்ளாத அரசு

சந்தர்ப்பவாத அரசியல் கூட்டு ,இவை எது வரை தொடரப் போகிறது மக்கள் சிந்தும் கண்ணீர் முன்பாக ,இதுவே காலிமுக திடல் மக்கள் முழக்கமாகவும் ஒலிக்கிறது

உரம் இல்லா முடங்கியது விவசாயம் இன்று உணவு இல்லா முடக்க படும் மக்கள்

,அடுத்து இறந்த பின்னர் மக்கள் சடலங்களை இருக்கட்டும் , அந்த கண்ணீர் புகை அரசாட்சியை வீழ்த்தட்டும் என்கிறது அப்பாவிகளின் கண்ணீர் துளி .

    Leave a Reply