என்னை விடு

என்னை விடு
Spread the love

என்னை விடு

உன்னை நினைக்கையில
உள்ளம் வியக்குதடி
என்ன நான் சொல்வேன்
எனகேதும் தெரியலடி

தூக்கம் இல்லாம
துடியாய் துடிக்கிறேண்டி
என்னை ஏண்டி வதைக்கிறாய்
ஏனோ தினம் கொல்லுறாய்

சாந்தமாய் இருந்த என்னை
சக்காளத்தி கெடுத்து புட்டா
ஒத்தை பார்வையாலே
என்னை கொண்ணு புட்டா

இப்படியே தவிக்கவா
இதை நீ பார்க்கவா
என் அழுகை பிடிக்கிறதா
ஏண்டி இனிக்கிறதா

பெற்று போட்ட தாயவளும்
பெருமை கொண்ட என் தமிழும்
என்னை கண்டு வாடுதடி
என்னை நீயும் விட்டுடடி ..!

ஆக்கம் 19-05-2025
வன்னி மைந்தன்