என்னை பார்ப்பாயா பதில் சொல்
உன்னை தினம் பார்க்கையிலே
உள்ளம் இன்று குளிருதடி
கன்னக்குழி பேரழகில்
கவிதை வந்து கொட்டுதடி
கொஞ்சி பேசும் உன் மொழிதனையே
கெஞ்சி கேட்க துடிக்குதடி
வஞ்சி உன் பேரழகில்
வாடி மனம் போகுதடி
பிள்ளை உன் செயலினால்
பிரியம் மனம் கூடுதடி
கள்ளம் இல்லா பேச்சினால்
காதல் வந்து ஊறுதடி
நித்தம் உன்னை பார்த்திடவே
நிலவே மனம் துடிக்குதடி
சத்தம் இல்ல பேசிடவே – இதயம்
சாளரம் மெல்ல திறக்குதடி
உன்னை தினம் எண்ணி எண்ணி
உயிரே உயிர் ஏங்குதடி
வெள்ளை மனம் கொண்டவளே
வெளி நாடு நீ வந்திடடடி
சோர்ந்து மனம் போகையிலே
சோர்வகற்றி போறவளே
வாடி நான் போகாமல்
வைய்யத்தில் என்னை பார்ப்பாயா ..?
வன்னி மைந்தன் (ஜெகன் )
ஆக்கம் – 25-01-2025
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- எப்படி நான் பேசிடுவேன்

- என்னை விடு

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- கவலைப் படுகிறேன்

- யார் மேல் குற்றம்

- காதலே சோகமா

- கண்டதெல்லாம் கனவு

- ஏமார்ந்த காதல்

- அர்ச்சுனா ஆவி பேசிறது

- எனக்கு என்ன ஆச்சு

- எனக்கொரு பதில் சொல்லாயோ

- உன்னால் தவிக்கிறேன்

- மன்னித்து விடு

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்










