உலகளவில் 7-ம் இடம்…. இந்திய அளவில் முதலிடம் – ரவுடி பேபி பாடல் சாதனை
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி, வரலட்சுமி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் மாரி-2.
இந்த படத்தில் டோவினோ தாமஸ், கிருஷ்ணா, ரோபோ சங்கர், காளி வெங்கட், வித்யா பிரதீப், கல்லூரி வினோத் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இந்த படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த பாடல் யூ-டியூப் தளத்தில் 71.5 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது .
தற்போது சர்வதேச யூ-டியூப் பட்டியலில் உலக அளவில் 2019-ம் ஆண்டு அதிகம் பார்க்கப்பட்ட பாடல் காட்சிகள் பட்டியலில் ரவுடி பேபி 7-வது இடத்தை பிடித்துள்ளது.
தனுஷ், சாய் பல்லவி
மேலும் யூ-டியூப் நிறுவனம் இந்திய அளவில் 2019-ம் ஆண்டு அதிகம் பார்க்கப்பட்ட பாடல் காட்சிகள் பட்டியலில் ரவுடி
பேபி பாடல் முதல் இடத்தை பிடித்துள்ளது என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதுவரை வெளியான தென்னிந்திய மொழி பாடல்களில் அதிக பார்வையாளர்களை கடந்து ரவுடி பேபி பாடல் தொடர்ந்து சாதனை படைத்தது வருகிறது.