உன்னால் அழுகிறேன் …..!
கரு நுழைந்து உருவெடுத்து
கண் திறந்த குழந்தாய் ….
முழு உடலும் உருவெடுத்து
முன்னே வர மறைந்தாய் …..
சதி வந்து பதி வைக்க
சா தங்கி மறைந்தாய் ….
வலியெடுக்க விழி கதற
வந்து வழி சென்றாய் ….
நிலையெடுத்து உயிர் கொடுக்க
நின்றவளும் மறந்தாள் ….?
முலை கொடுத்து மடி தரவோ
முளையிலே எறிந்தாள் ..?
எதுவந்து இவள் தடுக்க
என்னுயிரை புதைத்தாள் ..?
எதுவந்து நீ கூறி
என் வலியை துடைப்பாய் ….?
உடை கழற்றி உடல் காட்டி
உறவாடையில புரியலையா …?
உயிரணுவை சிதைக்கையிலே
உன் நெஞ்சு பதறலையோ ….?
தாயாவாள் பெண்னெண்று
தரணி இன்று சொன்னது ….
தப்பாகி போனதென்று
தனயனுக்கு புரிந்தது ……
உப்பில்லா பண்டமாய்
உள மகிழ்வு குலைந்தது ….
உள்ளிருந்து அழுகிறேன்
உயிர் அனுவிற்கு புரியுமோ …?
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -13/06/2019