இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலில் சிதறிய சிரியா இராணுவ முகாம்
இஸ்ரேல் இராணுவத்தினர் சிரியா தலைநகர் டமக்காஸ் பகுதியில் உள்ள சிரியா இராணுவத்தின் முக்கிய முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர் .
இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சிரியா இராணுவத்தின் முக்கிய முகாம் சிதறடிக்க பட்டது .
ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்த பகுதியில் நிலை கொண்டிருந்த சிரியா இராணுவத்தினர் மூவர் பலியாகியும் ஏழுபேர் காயமடைந்துள்ளனர் என சிரியா இராணுவம் தெரிவித்துள்ளது .
எனினும் சிரியா இராணுவம் கூறுவதை விட சிரியா இராணுவத்தினருக்கு இழப்புக்கள் அதிகம் என நம்ப படுகிறது.
சிரியா இராணுவத்தினரை இலக்கு வைத்து தொடர்ந்து இஸ்ரேல் இராணுவம் வலிந்து தாக்குதல் நடத்தி வருகிறது .
இவ்வாறு வலிந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரல்
இராணுவம் மீது சிரியா இராணுவம் தாக்குதல் நடத்துவதில்லை என்பது குறிப்பிட தக்கது.
எனினும் இதுவரை இந்த சிரியா இராணுவ முகாமில் ஏற்பட்ட சேத விபரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை .