
இலங்கை பொலிசாருக்கு நெத்தியடி வழங்கிய நீதிமன்றம்
யுக்திய நடவடிக்கை கீழ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான வாகனங்களை அவற்றின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வாகனங்களை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளுக்கு அவகாசம் வழங்குமாறு விடுத்த கோரிக்கையை நிராகரித்து கடுவெல நீதவான் திருமதி சனிமா விஜேபண்டார இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
இலங்கை பொலிசாருக்கு நெத்தியடி வழங்கிய நீதிமன்றம்
இந்தச் சொத்தை கையகப்படுத்துவதற்கு உயர் நீதிமன்றத்திடம் இருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முறையான உத்தரவுகளைப் பெறவில்லை என பிரதிவாதி சட்டத்தரணி நீதிமன்றில் கடும் ஆட்சேபனையை முன்வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
கடந்த வருடம் டிசெம்பர் மாதம் போதைப்பொருள் கடத்தல்காரரான ‘வெலிவிட்ட சுத்தா’ என்பவரின் சகோதரிக்கு சொந்தமான 5 சொகுசு பஸ்கள்,
நவீன கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை கடுவெல பொலிஸார் கைப்பற்றி குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்தமை குறிப்பிடத்தக்கது.
- தேனிசை செல்லப்பாவின் 84வது பிறந்த நாள்
- ஈஸ்டர் தாக்குதலை வைத்து அரசு அரசியல் செய்கிறது நாமல் ராஜபக்ச
- பருத்தித்துறையில் மூதாட்டி ஒருவர் அடித்துக் கொலை
- வீட்டை கேட்டு கடிதம் வந்தால் ஒப்படைப்பேன் மைத்திரிபால சிறிசேன
- அனுரகுமார திசாநாயக்க மீது கடுமையான தேர்தல் சட்ட மீறல்கள்
- அமைச்சர் பங்களாக்களில் பெறுமதியானவை மாயம்
- ஜனாதிபதி நிதி விசாரணை மைத்திரி CID யில் முன்னிலை
- இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்
- தியாகதீபம் அன்னை பூபதி அவர்களின் 37வது ஆண்டு நினைவுநாள் நினைவேந்தல்
- இளைஞன் அடித்துக்கொலை