இலங்கை கொழும்பில் மட்டும் 10,000 கொரனோ நோயாளிகள்


இலங்கை கொழும்பில் மட்டும் 10,000 கொரனோ நோயாளிகள்

கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக,

கொவிட் 19 தொற்று ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 402 தொற்றாளர்கள் நேற்று பதிவாகியுள்ளனர். இதற்கமைய, கொழும்பில் இதுவரை

பதிவாகியுள்ள மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 10, 140 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கம்பஹா மாவட்டத்தில் 188 தொற்றாளர்கள் நேற்று பதிவாகியுள்ளதுடன், கம்பஹா மாவட்டத்தில் இதுவரை பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 6,502 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட்19 தொற்றாளர்களாக 878 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒரே நாளில் அதிக தொற்றாளர்கள் பதிவாகிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.