இலங்கையில் 53 ஆயிரத்தை கடந்த கொரனோ நோயாளிகள்

இலங்கையில் கொரனோ

இன்றைய தினத்தில் நாட்டில் 749 கொரோனா தொற்றாளர்கள் பதிவானதை தொடர்ந்து இலங்கையில் பதிவான கொரோனா

தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 53 ஆயிரத்தை கடந்துள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.

ஆதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 53,062 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 45,171 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், 264 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

7,627 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Spread the love