இலங்கையில் பரவும் கொரோனா

இலங்கையில் பரவும் கொரோனா
Spread the love

இலங்கையில் பரவும் கொரோனா

இலங்கையில் பரவும் கொரோனா அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இலங்கை ஆளும் அரசு,கொரோனா பரவுதல் பீதியில் உறைந்துள்ள இலங்கை வாழ் தமிழ் சிங்கள மக்கள் .

கொரோனா நோயானது வேகமாக பரவ ஆரம்பிப்பு

திடீரென இலங்கையில் இப்பொழுது கொரோனா நோயானது வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதாக ,இலங்கை சுகாதார அமைச்சர் மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இவ்வாறு இந்த நோயானது மீளவும் நாட்டுக்குள் வேகமாக பரவினால் அவற்றை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்பது தொடர்பில் ,அரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதை அடுத்து தற்பொழுது அனைவரையும் மாஸ்க் அணிந்து செல்லுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

முக கவசம் அணிவது மூலமும் அவசியமென இலங்கை அரசின் சுகாதார அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.

180க்கும் மேற்பட்ட மருந்துகள் தட்டுப்பாடு

நாட்டில் 180க்கும் மேற்பட்ட மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

இவ்வாறன நிலையில் தற்போது சிக்கன் குனியா ,டெங்கு ,மலேரியா ,கொரோனா நோய்கள் ,வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

உண்மையில் இந்த நோய்கள் பரவி வருகிறதா அல்லது அரசு அதனை பரவுவதாக சொல்லி வேறு அரசியல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது .

இது தமிழர்களையும் இலங்கை வாழ் மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

எது எப்படி இருந்தாலும் விரைவில் இலங்கையில் தலை கீழ் மாற்றம் நிகழப்போவதை, இந்த விடயங்கள் வெளிப்படையாக அறிவித்து நிற்கின்றன.