இலங்கைக்கான வியட்நாம் தூதுவர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ஹோ தி தான் ட்ரூக் அவர்கள் 2022 செப்டம்பர் 30ஆந் திகதி வெள்ளிக்கிழமை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.
அமைச்சரின் நியமனம் குறித்து தூதுவர் வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், அவரது பதவிக்காலத்தில் அவருடன் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.
குறித்து தூதுவர் கலந்துரையாடினார். வியட்நாமும் இலங்கையும் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக அன்பான மற்றும் சுமூகமான உறவுகளை அனுபவித்து வருவதாகவும், பல துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை
விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் இதன்போது குறிப்பிடப்பட்டது.
2022 ஜனவரியில் வெளிவிவகார செயலாளர் மட்டத்தில் 4வது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் நடைபெற்றதை அமைச்சர் பாராட்டினார்.
இலங்கை மற்றும் வியட்நாமுக்கு இடையே அரசியல், சமூக,
கலாச்சார மற்றும் கல்வித் துறைகளில் வலுவான ஒத்துழைப்பு குறித்தும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.
- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்

- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது

- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

- வீரகெட்டியாவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவு









