இராமேஸ்வரம் மீனவர்கள் 30பேருக்கு விளக்கமறியல்

இராமேஸ்வரம் மீனவர்கள் 30பேருக்கு விளக்கமறியல்
Spread the love

இராமேஸ்வரம் மீனவர்கள் 30பேருக்கு விளக்கமறியல்

இராமேஸ்வரம் மீனவர்கள் 30பேருக்கு விளக்கமறியல் ,இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 30 இராமேஸ்வரம்

மீனவர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் இராமேஸ்வரம் பாம்பன் பகுதிகளை சேர்ந்த 30 மீனவர்கள் நெடுந்தீவுக் கடற்பரப்பில் 4 படகில் மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த

நிலையில் கடற்படையினரால் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர் .

வழக்கை விசாரித்த மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்