இயற்கையின் குரலாக மாறும் பிரகாஷ் ராஜ்பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ்


இயற்கையின் குரலாக மாறப்போகிறேன் என்று கூறியுள்ளார்.

இயற்கையின் குரலாக மாறும் பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜ்


நடிகர் பிரகாஷ்ராஜ் ஒரு இயற்கை ஆர்வலர். ஊரடங்கு காலத்தைக்கூட தனது பண்ணை வீட்டில் தான் குடும்பத்துடன்

செலவிட்டு கொண்டு வருகிறார். அதிலும் இயற்கை விவசாயத்தின் மீதும் அவருக்கு அதிக ஈடுபாடு உள்ளது.

சினிமாவில் பிசியாக நடித்து வந்தாலும், இயற்கையின் மீது கொண்ட ஈடுபாட்டால் சின்னத்திரையில் கால்பதித்துள்ளார்.

டிஸ்கவரி தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் வைல்ட் கர்நாடகா எனும் நிகழ்ச்சிக்கு அவர் குரல் கொடுக்க முன்வந்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர், ஒரு உபயோகமுள்ள பயணம். இயற்கையின் குரலாக மாறப்போகிறேன். இதற்கு முன்பு

இல்லாத அளவுக்கு மிகுவும் சிரமப்பட்டு தயாராக்கப்பட்ட இந்திய வன வாழ்க்கையின் ஆவணப்படம். அதற்கு தமிழ் மற்றும்

தெலுங்கில் வர்ணனை கொடுத்ததை மிகவும் சிறப்பாக உணர்கிறேன். இவ்வாறு பிரகாஷ்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.