இந்தியில் ரீமேக் ஆகும் மாஸ்டர் – விஜய் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்

மாஸ்டர்

இந்தியில் ரீமேக் ஆகும் மாஸ்டர் – விஜய் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்

மாஸ்டர் படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ள நிலையில், அதில் விஜய்

கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியில் ரீமேக் ஆகும் மாஸ்டர் – விஜய் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்
விஜய்

லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் வெளியாகி உள்ள படம் மாஸ்டர். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இப்படம்

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. இப்படம் தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டன.

மாஸ்டர் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இதன் இந்தி ரீமேக்

உரிமத்தை எண்டமால் ஷைன் இந்தியா நிறுவனம் பெருந்தொகை கொடுத்து வாங்கி உள்ளது.

ஹிரித்திக் ரோஷன்

இந்நிலையில், மாஸ்டர் படத்தின் இந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் ஹீரோவாக நடிக்க உள்ளதாக

கூறப்படுகிறது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். அதேபோல் வில்லனாக விஜய் சேதுபதியே நடிக்க

உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love