இதயமே எந்நாளும் உனை தாங்குவேன்

இதயமே எந்நாளும் உனை தாங்குவேன்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

இதயமே எந்நாளும் உனை தாங்குவேன்

என்பாட்டை என்பாட்டை நீ பாடவா
எனக்குள்ளே நீதானே எழுந்தாடவா
உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன்
உள்ளத்தை தந்தே உயிராகினேன்

கறுப்பென்ன சிவப்பென்ன ஒன்றாகினோம்
கலந்தாடி தானே மகிழ் வேற்றினோம்
உன்மொழி எனக்கு பலம் இட்டதே
உலகாழ எனக்கு வழி தந்ததே

நீயின்றி நானின்றி உலகாடுமா
நினைவுகள் இலலாமல் உயிர் வாழுமா
உன்போல உறவொன்றை நான் காணுமோ
உயிராகி நின்றாய் அது போதுமே

இல்லாமை இருக்கின்ற வேளையிலே
இதயத்தில் உன் பாசம் குறையலையே
இதுதானே நீ தந்த காதல் என்றேன்
இதயமே எந்நாளும் உனை தாங்குவேன் ….!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 01-08-2022


இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்