இட்லி தோசை பரட்டோவுக்கு ஏற்ப சிக்கன் கிரேவி இந்த மாதிரி செய்ங்க

இட்லி தோசை பரட்டோவுக்கு ஏற்ப சிக்கன் கிரேவி இந்த மாதிரி செய்ங்க
இதனை SHARE பண்ணுங்க

இட்லி தோசை பரட்டோவுக்கு ஏற்ப சிக்கன் கிரேவி இந்த மாதிரி செய்ங்க

இட்லி தோசைக்கு வீட்டில சிக்கன் கிரேவி ,இந்த மாதிரி செஞ்சு பாருங்க ,செம தூக்கலா இருக்கும்.


இருபது இட்லி தோசை கூட சாப்பிடுவீங்க .ரெம்ப தரமான ,அட்டகாசமான சுவையான சிக்கன் கிரேவி .

வாங்க இப்ப சுவையான சிக்கன் கிரேவி செய்யலாம்

செய்முறை ஒன்று

அடுப்பில கடாய வைத்து எண்ணெய் போடுங்க .

வெட்டி வைத்த தக்காளி ,வெங்காயம் ,போட்டு வதக்கி வாங்க .கண்ணாடி பதம் வரும் வரைக்கும் ,இதே மாதிரி வதக்கி வாங்க .

மேலும் இஞ்சி பூண்டு சேர்த்து அப்படியே வதக்கி வாங்க.
வதங்கி வந்ததும் ஆறவிட்டு ,எடுத்து அரையுங்க .

அப்புறம் மீள அடுப்பில் ஒரு கடாய வைத்து ,இரண்டு துண்டு பட்டை ,நான்கு கராம்பு ,இரண்டு ஏலக்காய் .ஒரு நட்சத்திர சோம்பு,
போட்டு எண்ணையில் பொரிய விடுங்க .

புரிந்த பின்னர் கருவேப்பிலை போட்டு ,அரைத்து வந்தவற்றை இது கூட சேர்த்து வதக்கி வாங்க .

மசாலா நன்றாக வந்திருக்கு ,காரத்திற்கு ஏற்ப தூள் ,மல்லி தூள் .காஸ்மீர் மிளகாய் தூள் ,மஞ்சள் தூள் ,போட்டு வதக்கி வாங்க.

மாசலா பச்சை வாசம் போகும் வரை, வதக்கி வந்தவுடன் ,மசாலாவுடன் சேர்த்து வதக்கி வாங்க .

தண்ணி விடும் முன்பாக நன்றாக வதக்கி வாங்க .வதக்கி வந்த பின்னர் ,சிக்கன் கிரேவிக்கு ஏற்றவாறு தண்ணி விட்டு கலக்குங்க .

சிக்கன் கிரேவி தண்ணியாக வேண்டுமா ,அல்லது திக்கா வேண்டுமா ஏன்பதற்கு ஏற்ப தண்ணி விடுங்க .

நன்றாக மூடியை போட்டு வெந்துவர விடுங்க .இப்போ தண்ணி வற்றி வரும் வரை பாருங்க .சிக்கன் கிரேவி இப்போ ரெடியாகிடுச்சு .

மல்லி இலையை போட்டு சிக்கன் கிரேவியை இறக்கிடுங்க

சப்பாத்தி, தோசை ,இட்லி ,பரோட்டோவோட , சேர்த்து சாப்பிட சிக்கன் கிரேவி ரெடியாகிடிச்சு


இதனை SHARE பண்ணுங்க

Author: நலன் விரும்பி

Leave a Reply