சேமியா உப்பு மா 10 நிமிடத்தில் ரெடி அட்டகாசமான சமையல்

சேமியா உப்பு மா 10 நிமிடத்தில் ரெடி அட்டகாசமான சமையல்
Spread the love

சேமியா உப்பு மா 10 நிமிடத்தில் ரெடி அட்டகாசமான சமையல்

சேமியா உப்பு மா 10 நிமிடத்தில் ரெடி அட்டகாசமான சமையல்

சேமியா உப்பு மா 10 நிமிடத்தில் ரெடி .வீடே மணக்கும் விதமாக
அட்டகாசாமான சுவையோடு, இந்த சேமியா உப்புமா இருக்குங்க .

நாம நாள் தோறும் சாப்பிடும் உணவுகளில் ,விலை கூடியதும் சற்று மாறுபட்ட உணவுகளில் ஒன்றாக சேமியா உப்பு மா உள்ளது .

அப்படியான இந்த சேமியா உப்பு மா ,எப்படி இலகுவாக செய்வது என்பதை ,பார்க்கலாம் வாங்க .

இந்த சேமியா உப்புமா செய்வது எப்படி ..?
சேமியா உப்பு மா செய்து கொள்ள தேவையான பொருட்கள் .

இப்போ சேமியா உப்பு மா செய்முறைக்குள் போகலாம் .

இந்த சேமியா உப்புமா சமைத்திட ,கடாய தயார் படுத்தி ,அதற்குள்ள எண்ணெய் விட்டு கொள்ளுங்க .
இது கூட ஒரு கைப்பிடி முந்திரி பருப்பு சேர்த்து கொள்ளுங்க .

பொன் நிறமா வரும் வரையும் முந்தி பருப்பை வறுத்து எடுங்க .அப்படி கலருக்கு வந்த பின்னர் ,அந்த முந்திரி பருப்பை வேறு ஒரு பாத்திரத்தில எடுத்து வைத்து கொள்ளுங்க .

அப்புறம் ,அதே எண்ணையில் ,வேர் கடலை சேர்த்து கொள்ளுங்க .அதையும் நன்றாக பொரிந்து வரும் வரை ,பார்த்து பொரித்து எடுத்து கொள்ளுங்க .

அப்புறம் அதே எண்ணைக்குள்ள ,கடுகு ,சேர்த்து கொள்ளுங்க .கடுகு பொரிந்து வந்த பின்னர் ,அரை கரண்டி உளுந்து பருப்பு சேருங்க .கடலை பருப்பும் கூடவே சேர்த்து கொள்ளுங்க .
சேமியா உப்பு மா 10 நிமிடத்தில் ரெடி அட்டகாசமான சமையல்

வெட்டி வைத்த இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து கொள்ளுங்க .அதை அப்படியே வதக்கி வாங்க .கூடவே கருவேப்பிலை சேர்த்து வதக்குங்க .

வதங்கிய பின்னர், வெட்டி வைத்த தாக்காளி சேர்த்து கொள்ளுங்க .

இப்போ இதில் காய்கறி சேர்த்து கொள்ளுங்க .நீங்க விரும்பிய மரக்கறி வகைகளை சேர்த்து கொள்ளுங்க .

நீங்க விரும்பும் காய்கறிகள் இதில் சேர்த்து கொள்ளுங்க .
சீக்கிரமா வேகும் காய்கறிகளை ,இதில சேர்த்து கொள்ளுங்க, அப்பா தான் சமையல் வேலை ஈசியாக இருக்கும் .

உப்பை போட்டு மூன்று நிமிடம் வேக வைத்து கொள்ளுங்க .காய்கறி நிறம் மாறாம இருக்க ,ஒரு கட்டி சக்கரை சேர்த்து கொள்ளுங்க .இது கூடவே மஞ்சள் தூள், போட்டு நல்ல வதக்கி கொள்ளுங்க .

செய்முறை இரண்டு

காய்கறிகள் வேகி வந்ததும் ,இப்போ அளவான தண்ணி சேருங்க ,ஒரு கப்பு ,சேமியா அல்லது உங்களுக்கு தேவையான ,சேமியா போட்டு கலகுக்குங்க .
தண்ணி சூடானதும் சேமியா சேர்த்து கொள்ளுங்க .தண்ணி அளவாக விடுங்க ,தண்ணி அதிகரித்தால் சேமியா புக்கையாக வந்திடும் .

அதனால் அளவான தண்ணி சேருங்க .

இப்போ இறுதி கட்டத்திற்கு வந்துட்டோம் .இறுதியாக வறுத்து வைத்த முந்திரி மற்றும் வேர்க் கடலை என்பனவற்றை போட்டு மிக்ஸ் பண்ணுங்க

நல்லாவே கலக்கி கொள்ளுங்க . அம்புட்டு தாங்க ,பத்து நிமிடத்தில் சேமியா உப்புமா ரெடியாச்சு .

இபப்டி நாள் தோறும் இலகுவான முறையில் ,வேகமாக செய்து சாப்பிடலாம் .

வேலைக்கு போய் வாறவங்க .இப்படி செய்து அசத்துங்க .

நேரம் மித படுத்த படுவதுடன் ,சுவையான தரமான சேமியா உப்புமா கிடைக்கிறது .
தவிர உடலுக்கு ஆரோக்கியமானதும் ,வாய்க்கு சுவையானமதுமான சேமியாவும் சாப்பிட்டாச்சு .
இப்போ அந்த சேமியா உப்புமா வாசம் ,வீடடை சுற்றி வர ,அயல் வீட்டு காரங்க கதவை தட்ட போறாங்க .

அவங்க நம்ம வீடு வருவதற்கு முன்பாக ,சமைத்து வைத்த சேமியா உப்புமாவை சாப்பிட்டு முடிச்சிருங்க மக்களே .

Leave a Reply