ஆலோசனை கூட்டத்திற்கு முன் விஜய்யுடன் ஆனந்த் பேச்சு
ஆலோசனை கூட்டத்திற்கு முன் விஜய்யுடன் ஆனந்த் பேச்சு ,தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தை முதன்முறையாக சந்தித்த விஜய் தலைமையிலான த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து வரலாற்றில் இடம்பிடித்து உள்ளது.
இந்த வெற்றி உற்சாகத்தில் விஜய்,
இந்த வெற்றி உற்சாகத்தில் விஜய், ஆளுநர் அர்லேகரை சந்தித்து த.வெ.க.வை ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கோரினார்.
ஆனால் ஆளுநர் அர்லேகர், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதால்,
118 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை வழங்கினால்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
இதையடுத்து, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளிடம் ஆதரவு
கேட்டு விஜய் கடிதம் எழுதினார். மேலும் த.வெ.க. நிர்வாகிகளை நேரில் அனுப்பியும் வேண்டுகோள் விடுத்தார்.
அவரது கோரிக்கையை ஏற்று 5 எம்.எல்.ஏ.க்கள் வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சி மட்டும் த.வெ.க.வுக்கு கைகொடுத்தது. மற்ற கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசித்து இன்று முக்கிய முடிவை அறிவிக்க உள்ளனர்.
தவெக தலைவர் விஜயின் நீலாங்கரை இல்லத்திற்கு
இந்நிலையில், தவெக தலைவர் விஜயின் நீலாங்கரை இல்லத்திற்கு சென்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தவெக எம்.எல்.ஏக்களுடனான ஆலோசனை கூட்டத்துக்கு முன்பு விஜயை சந்தித்து அவர் பேசினார்.
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை








