அவர்கள் காதலர்கள் அல்ல… பிரியா ஆனந்த்


அவர்கள் காதலர்கள் அல்ல… பிரியா ஆனந்த்

தமிழ் மொழியில் பல படங்களில் நடித்து பிரபலமாகி இருக்கும் பிரியா ஆனந்த், அவர்கள் காதலர்கள் அல்ல என்று கூறியிருக்கிறார்.

அவர்கள் காதலர்கள் அல்ல… பிரியா ஆனந்த்
பிரியா ஆனந்த்


பிரியா ஆனந்துக்கும், அதர்வாவுக்கும் காதல்… இருவரும் நெருக்கமாக பழகி வருகிறார்கள் என்றும், பிரியா ஆனந்துக்கும்,

கவுதம் கார்த்திக்கும் காதல்… இருவரும் திருமணம் வரை நெருங்கி விட்டார்கள் என்றும், அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டது.

அந்த இரண்டு கதாநாயகர்களில் பிரியா ஆனந்த் மனம் கவர்ந்தவர் யார்? என்று அவரிடமே கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர் சொல்கிறார்:-

கவுதம் கார்த்திக் – அதர்வா

“அதர்வா, கவுதம் கார்த்திக் இருவருமே என் நண்பர்கள். அவர்கள் என் காதலர்கள் அல்ல. இதை நாங்கள் மூன்று பேருமே

தனித்தனியாக உறுதி செய்து இருக்கிறோம். நான் நன்றாக இருக்க வேண்டும் என்று நண்பர்கள் என்ற முறையில் இருவருமே

விரும்புகிறார்கள். அதேபோல் என் நண்பர்கள் இருவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நல்ல சினேகிதியாக நான் விரும்புகிறேன்’’ என்றார்.