அவரை பார்த்து பதட்டம் அடைந்தேன் – ராஷ்மிகா


அவரை பார்த்து பதட்டம் அடைந்தேன் – ராஷ்மிகா

தெலுங்கில் பிரபல நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, அவரை பார்த்து பதட்டம் அடைந்தேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

அவரை பார்த்து பதட்டம் அடைந்தேன் – ராஷ்மிகா
ராஷ்மிகா


நடிகர் மகேஷ் பாபு மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் சரிலேரு

நீக்கவேறு. ராஷ்மிகா மந்தனா, இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேட்டி அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு. அவரோடு இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் ரொம்பவே மகிழ்ந்தேன்.

ஆனால், படப்பிடிப்பு துவங்கியதும், எனக்குள் ஒரு பதற்றம் தொற்றி கொண்டது. பெரிய நடிகர், என்னுடைய நடிப்பை பார்த்து என்ன நினைப்பாரோ என பதற்றம் அடைந்தேன்.

ராஷ்மிகா – மகேஷ் பாபு

படப்பிடிப்பு தளத்தில் அவ்வபோது பயத்தில் சோர்ந்து விடுவேன். இதை கவனிக்கும் நடிகர் மகேஷ் பாபு, என்னை தேடி வந்து, நடிப்பு பற்றி நிறைய விஷயங்ளை என்னிடம்

பகிர்ந்து கொள்வார். நடிக்கும்போது எனக்கு இருக்கும் தயக்கங்களை உணர்ந்தவர், அதை எப்படி உடைக்க வேண்டும் என்பது குறித்தெல்லாம் சொல்வார்.

இத்தனை பெரிய நடிகர், இவ்வளவு எளிமையாக எல்லோரிடமும் பழகுகிறாரே என வியந்திருக்கிறேன். இவ்வாறு ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார்