அரைத்த பாரை மீன் குழம்பு வைப்பது எப்படி

அரைத்த பாரை மீன் குழம்பு வைப்பது எப்படி
Spread the love

அரைத்த பாரை மீன் குழம்பு வைப்பது எப்படி

பாரை மீன் – உப்பு மற்றும் மஞ்சல் போட்டு கழுவி எடுக்கவும் .

தேவையான பொருட்கள்
காய்ந்த மிளகாய் 5
சின்ன சீரகம் 1 தேக்கரண்டி
மிளகு 3/4 தேக்கரண்டி
கொத்தமல்லி 4 தேக்கரண்டி
உல்லி 5
மஞ்சல் 1/2 தேக்கரண்டி
தேங்காய்ப்பால் 3 தேக்கரண்டி
வெங்காயம் 1
கறிவேப்பில்லை
புளி தேவைக்கேற்ப
உப்பு
நல்லெண்ணெய்
தண்ணீர் தேவைக்கு ஏற்ப ..

ஒரு பாத்திரத்திரத்தை அடுப்பில் வைத்து சூடு ஏற்றவும் .. சூடான சட்டியை அடுப்பிலிருந்து இறக்கவும் அதில் மல்லி , மிளகாய் , மிளகு , சீரகம் போட்டு 2 நிமிடம் சூடக்கவும்.


சூடான அனைத்தும் மற்றும் உல்லி மஞ்சல் அனைத்தையும் மிக்ஸி யாரில் போட்டு நல்ல பசுந்தா அறைத்து எடுத்து வைக்கவும்.

பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்னெய் ஊற்றி நன்கு சூடானதும் அதில் வெங்காயம் போட்டு வதக்கவும் அத்துடன் கறிவேப்பிலை சேர்க்கவும் ..


வெங்காயம் பொன்னிரமாக வரும் வரை வதக்கவும். பின் அதில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறி விடவும் .


பின் அதில் புளி கரைசலை மற்றும் தேங்காய் பால் சேர்த்து 4 நிமிடங்கள் கொதிக்க விடவும் பின் அதனுள் வெட்டி வைத்த பாரை மீனை போட்டு மூடி 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.

video