அஜித் படத்தில் நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை
நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பின் வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் அஜித் நடித்து வருகிறார்.
போனிகபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித் தவிர வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
குறிப்பாக அஜித்தின் ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து இப்படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாராவே நடிக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது.
பின்னர் நஸ்ரியா நடிப்பதாக தகவல்கள் வெளியானது. அவர் மறுத்து விட்ட நிலையில் யாமி கவுதம் தான் வலிமை பட நாயகி என வைரலானது.
இலியானா
ஆனால் இந்தத் தகவல்கள் எதுவுமே உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் இலியானாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
வலிமையில் போலீஸ் அதிகாரி, கார் ரேஸ் வீரர் என அஜித் இரண்டு கேரக்டர்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.
எனவே அதில் ஒரு கேரக்டருக்கு ஜோடியாக இலியானா நடிக்கலாம் எனத் தெரிகிறது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோயினாக இருந்த இலியானா, தமிழில் கேடி, நண்பன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.