பஸ் விபத்து 14 பேர் மருத்துவமனையில் அனுமதி
பஸ் விபத்து 14 பேர் மருத்துவமனையில் அனுமதி ,சேருநுவர பொலிஸ் பிரிவில் சேருநுவர-கந்தளாய் வீதியில் சேருநுவரவில் உள்ள கல்லாறு இராணுவ முகாமுக்கு முன்னால் உள்ள வளைவுக்கு அருகில் இன்று (20) காலை
காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானது.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பஸ் வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் இருந்த மரத்தில் மோதி, கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து இடம்பெறும் போது பஸ்ஸில் சுமார் 49 பயணிகள் இருந்தனர். மேலும் பஸ் சாரதி மற்றும் நடத்துனர் உட்பட 14 பயணிகள் விபத்தைத் தொடர்ந்து சிகிச்சைக்காக சேருநுவர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர், சாரதி மற்றும் 9 பயணிகள் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தற்போதைய விசாரணையில், விபத்துக்கான காரணம் சாரதியின் கவனயீனமே என்பது தெரியவந்துள்ளது.
சேருநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன

- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி

- இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா

- புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்









