நொறுங்கிய இராணுவ டிபென்டர் வாகனம்
நொறுங்கிய இராணுவ டிபென்டர் வாகனம் ,பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் இராணுவத்தினருக்கு சொந்தமான டிஃபென்டர் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் காரணமாக பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வீதியில் வாகன நெரிசலும் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இலங்கை இராணுவத்திற்கு சொந்தமான இந்த டிஃபெண்டர் வாகனம் இன்று (25) அதிகாலை 05.30 மணியளவில் விபத்துக்குள்ளானது.
பெலவத்தை திசையிலிருந்து பாராளுமன்ற வீதி ஊடாக பொரளை நோக்கி பயணித்த போது, டிபென்டர் வாகனம் தியவன்னா சதுப்பு நிலத்தில் விழுந்துள்ளது.
விபத்து நடந்த போது சாரதி மட்டும் அங்கு இருந்துள்ள நிலையில், அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
இராணுவத்தினரின் தலையீட்டின் பின்னர், ஏறக்குறைய இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் வாகனம் மீட்கப்பட்டது.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு








