துருக்கி இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல்

Spread the love

துருக்கி இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல்

துருக்கி இராணுவத்தின் அதிமுக்கிய விமான தளம் அடங்கிய இராணுவ முகாமாக விளங்கி வரும் Zelikan இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த ரொக்கட் தாக்குதலில் சிக்கி துருக்கிய இராணுவ முகாம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .

குறித்த துருக்கி இராணுவம் முகாம் மீது குருதீஸ் போராளிகள் தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்.

வடக்கு ஈராக்கில் உள்ள குருதிஸ் பகுதிகள் மீது துருக்கிய இராணுவம் நடத்திய எறிகணை தாக்குதல்களில் சிக்கி பல டசின் மக்கள் பலியாகிய நிலையில் இந்த பதிலடி தாக்குதலாக ரொக்கட் தாக்குதல் நிகழ்த்த பட்டுள்ளது.

குருதிஸ் போராளிகள் தாயாக பகுதிகளை துருக்கிய இராணுவம் ஆக்கிரமித்து அந்த மக்களை மிரட்டி அடிமைகளாக்கி வருகிறது.

இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகள் போன்ற போராளிகள் அமைப்பாக தமது தேசிய விடுதலைக்கு நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக போராடி
வருகின்ற அமைப்புகளில் குருதீஸ் போராளிகள் அமைப்பும் ஒன்று என்பது இங்கே குறிப்பிட தக்கது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *